இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.பி.நளீம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை தலைமைக் காரியாலய பயிற்சிப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபிர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை பயிற்சி உத்தியோகத்தர் எம்.எம்.வஸீம், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.மௌசூன், மதிப்பீட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.மக்பூல், முன்னாள் போதனாசிரியர் எஸ்.எம்.சியாத், சாய்ந்தமருது பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இஸ்ஸதீன், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் தகவல் தொழிநுட்பம், குழாய் பொருத்துனர், மின்னியலாளர் போன்ற பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான தேசிய தொழில் தகமை NVQ சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.