கொவிட் 19 காரணமாக விடுபட்ட கல்வி நடவடிக்கைகளை நிவர்த்தி செயவதற்காகவும் மாகாணத்தின் க.பொ.த. சா.தர 2020 அடைவுமட்டத்தினை அதிகரிக்கச்செய்யுமுகமாகவும் கிழக்குமாகாண கல்வித்திணைக்களம் விசேட செயற்றிட்டமொன்றை இன்று(22)செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கின்றது.
இச்செயலமர்வு கடந்தவாரம் நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்டமை தெரிந்ததே.
க.பொ.த.சா.தர பூச்சிய சித்தியின்மை(G.C.E.O/L. ZERO FAIL) எனும் இவ்விசேட செயற்றிட்டமானது தமிழ் சிங்கள மொழிமூலமாகவும் மாவட்ட ரீதியாகவும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் முதலாவது செயலமர்வு இன்று அம்பாறை மாவட்ட தமிழ்மொழிமூலத்தில் இன்று(22) செவ்வாய்க்கிழமை காலை 9மணிமுதல் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிஸாம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கு கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய 4கல்வி வலயங்களையும் சேர்ந்த கல்விஅபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரியஆலோசகர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
க.பொ.த சாதர மாணவர்களின் தற்போதைய அடைவுமட்டநிலை பொதுப்பரீட்சையில் அடைவுமட்டத்தினை அதிகரிககச்செய்வதற்கான விசேட திட்டங்கள் என்பன பற்றி கலந்துரையாடப்படவிருப்பதாக மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
இதுபோன்று ஏனைய மாவட்டங்களுக்கும் தமிழ் சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தனித்தனியாக வெகுவிரைவில் நடாத்தப்படவிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.