பௌத்த, இஸ்லாம் மதத் தலைவர்களுக்கான செயலமர்வொன்று அம்பாறையில் நடைபெற்றது.

பௌத்த, இஸ்லாம் மதத் தலைவர்களுக்கான செயலமர்வொன்று அம்பாறையில் நடைபெற்றது.
 
மதங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாறள்கள் மற்றும் உரையாடல்களை ஏற்படுத்தி தேசத்தின் அமைதிக்கு வழி சமைக்கும் வகையில் பௌத்த, இஸ்லாம் மதத் தலைவர்களுக்கான செயலமர்வொன்று அம்பாறையில் நடைபெற்றது.
 
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன், அட்டாளைச்சேனை சர்வமதக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தேசிய சமாதானப் பேரவையின் சிரேஷ் நிகழ்சித்திட்ட அதிகாரி எம்.யு.மதானி உவைஸ், பேரவையின் திட்ட முகாமையாளர் நிஸாந்த குமார ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
 
‘மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு மற்றும் ஏனையவர்களுடன் சகோதரத்துவத்தை பகிர்ந்து கொள்ளல் போன்றனவை மூலம் இலங்கையில், பன்மைத்துவ சமுதாயத்தை வலுவூட்டுவதுடன் தேசத்தின் அமைதிக்கும் வழி சமைப்போம்’ எனும் கருப்பொருளில் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.
 
இக்கலந்துரையாடலில், அம்பாறை மாவட்ட பௌத்த, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த அம்பாறை வித்தியானந்த பிரிவினா மாணவர்கள் மற்றும் அரபுக் கல்லுரிகளின் மாணவர்கள், சமயத் தலைவர்கள், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபிக், மாவட்ட பௌத்தமத அலுவல்கள் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் தமிந்த ஹிமி மற்றும் மகா ஓயா கலாசார உத்தியோகத்தர் வட்டரெக விஜிதஹிமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில், பௌத்த, இஸ்லாம் மக்களிடையில் உள்ள கசப்புணர்வுகள், மதரீதியான சந்தேகங்கள், மதக்கொள்கைகள் போன்றன தொடர்பில் கருத்ருப்பரிமாறள்கள் இடம் பெற்றதுடன் மதத்தலைவாக்ளினால் உரிய பதில்களும் அளிக்கப்பட்டன.
 
எதிர்காலத்தில், இனங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை, இன ஐக்கியத்தை மேலும் வலுப்பெறச் செய்து தேசத்தின் அமைதிக்கும், சமய, கலை, கலாசார சமத்துவத்தை பேணுவதற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் இன, மத பேதமின்றி ஒன்றிணைவோம் எனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

Related posts