கல்முனையில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்: கடும் கட்டுப்பாடு விதிப்பு.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணனின் அறிவிப்பு.

கல்முனையில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் சமுகக்கவசம் சசமூக இடைவெளி போன்ற சுகாதாரநடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மீறுபவர்களுக்கெதிராக சசட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் குண.சுகுணன்  தெரிவித்தார்.
 
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுத் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
 
மீறும் பட்சத்தில் குறித்த பஸ்களின் சாரதிகள் நடத்து நர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் கை கழுவுவதோடு கட்டயாம் சமூக இடைவெளியை பேணுமாறு கேட்டுள்ளார்.
 
தனியார் வகுப்பு நிலையங்களில் சுகாதார பகுதியினர் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
கல்முனை பிராந்தியத்தில் 32 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாமெனவும்.சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும்இ இதனை உதாசீனம் செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்துக்கு வருபவர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் கேட்டுள்ள அவர் பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தைகள் வணக்கஸ்தலங்கள் ஆகிவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் கேட்டுள்ளார்.
 
இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts