மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எல்லைப்பினக்கினை தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் நேற்று காலை களவிஐயம் ஒன்றினை கல்லாறு நீலாவனை பகுதிக்கு சென்று நிலமைகளை அவதானித்தனர்.
மாவட்டங்களின் எல்லைகளை பார்வையிட்ட இரு குழுக்களும் எல்லை வரைபடங்களின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது தீர்;க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட எல்லை நிர்;ணயத்திற்கு அமைவாக நிலஅளவை படங்களில் முற்றிலும் வித்தியாசமான முறையில் கானப்படுவது பிரதேச சபைகளின் எல்லைகளை வைத்துக்கொண்டு மாவட்ட நிர்வாக எல்லைகளை வரையறை செய்யமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் தனது அரசாங்க அதிபருடனும் அது தொடர்பான குழுவினருடன் கலந்துரையாடி தங்களின் தீர்மாணத்தினை மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அறிவிப்பதாக தெரிவித்தனர்.
எல்லைகளை அவதானித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அத்தோடு மட்டக்களப்பு அம்பாறை நிலஅளவை திணைக்களத்தின் நிலஅளவை அத்தியட்சகர்கள் உள்ளுராட்சி ஆணையாளர் பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா மற்றும் துறைசார் நிபுனர்களும் கலந்துகொண்டனர்.