வயயோதிபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மரணம் -மட்டக்களப்புப் பகுதியில்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு (தெற்கு) பிரதேசத்தைச் சேர்ந்த வயயோதிபர் ஒருவர் அவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று(11) மாலை தீடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த மாதம் வயல் வேலைக்காக வேலன் இளையதம்பி (62) என்பவர் பொலநறுவைப்பிரதேசத்திற்கு வேலைக்கு சென்று சுகயீனம் அடைந்த நிலையில் தனது வீடு திரும்பியிருந்த போது அவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் சம்பவ தினமான நேற்று திடீரென மயக்கமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
 
தற்பொழுது மரணமானவரின் உடல் பொது சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸாரினால் பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக பொதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவத்தையடுத்து அப்பிரதேச மக்களிடம் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related posts