அலோசியஸ்-கசுன் ஆகியோருக்கு சிறையில் உணவு வழங்கப்படவில்லை

பெர்பச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு  (19) காலை 6 மணிமுதல் 8 மணித்தியாலங்கள் உணவோ, நீரோ வழங்கப்படவில்லையென, ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா நீதிமன்றதில் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்குறிப்பிட்ட கருத்து சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு 1.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சிறைச்சாலை கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இரு கைதிகள் உணவருந்தாமை குறித்து மேலும் கூடிய கவனம் செலுத்த  வேண்டும் எனவும், இவ்வாறான தவறுகள் இனி இடம்பெறக்கூடாதெனவும், சிறைச்சாலைக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர்களின் விளக்கமறியல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts