கொரோனாத்தொற்றுவிலக வீரமுனையில் விசேட ஹோமம்.

 
(காரைதீவு  சகா)

கொரோனாத்  தொற்றிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி வரலாற்றுப்பிரசித்திபற்ற வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில்விசேட ஹோமமும் பிரார்த்தனை வழிபாடும் (23) திங்கட்கிழமை அதிகாலை   சிறப்பாக நடைபெற்றது.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தில் விசேடஹோமம் நடைபெறும் எட்டாவது(8)ஆலயமாக இது திகழ்கிறது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கில் பிரசித்திபெற்ற வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார்  ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள்  தலைமையில் அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது.குறித்த மந்திரத்தை  மருதையடிப்பிள்ளையாராலய சிவ
ஸ்ரீ   கஜமுகசர்மா உச்சாடனம் செய்தார்.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் 
பிரதமஅதிதியாகவும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா விசேட அதிதியாகவும் கலந்துகொண்டார்.இந்துகலாசார மாவட்ட உத்தியோகத்தர்களான கு.ஜெயராஜி என்.பிரதாப் ஆகியோரும் பிரதேசகலாசார உத்தியோகததர் எஸ்.சிறிப்பிரியா  ஆலய பொருளாளர் எஸ்.சிவராமன்  கலந்து கொண்டனர்.

இப்பிராத்தனை நிகழ்வானது 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ‘ஆலயதரிசனம்’ நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .வானொலியிருந்து ஒலிபரப்பாளர்  விசுகருணாநிதியும் வீரமுனையிலிருந்து செய்தியாளர்  வி.ரி.சகாதேவராஜாவும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தனர்.

இந்துகலசார திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனின் வழிகர்டுதலில் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி  இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Related posts