சிறுவர் நன்னடத்தை திணைக்கள கல்முனை பிராந்திய காரியாலயம், அமைச்சின் செயலாளரால் திறந்து வைப்பு.

கிழக்கு மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி அறுபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் கட்டிமுடிக்கப்பட்ட கல்முனை சிறுவர் நன்னடத்தை காரியலய கட்டிடத்திறப்பு விழா இன்று காலை சிறுவர் நன்னடத்தை கல்முனை காரியாலய பொறுப்பதிகாரி டீ. மதியழகன் தலைமையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். 
 
இந்நிகழ்வில் மேலும் அம்பாறை மாவட்ட கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாக்கீர்,
கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி றிஸ்வினி றிபாஸ், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள உதவி ஆணையாளர் எஸ். சரண்யா, 
கல்முனை பிராந்திய சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ். சிவகுமார், கல்முனை பிராந்திய சிறுவர் நன்னடத்தை காரியாலய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இக்கட்டிட திறப்புவிழா நினைவாக அதிதிகளினால் மரக்கன்றுகளும் இங்கு நடப்பட்டது.

Related posts