மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ,சங்க உறுப்பினர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் இன்று மட்டக்களப்பு மாமாங்கம் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது நடைபெற்றது . .
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் போஷகர் எஸ் .சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் , சமூக சேவையாளருமான த . வசந்தராசா , மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் அந்தோனி லியோன் ராஜ் ஆகியோர் சங்க உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் .
இந்நிகழ்வினை தொடர்ந்து சங்கத்தில் இயங்குகின்ற உறுப்பினர்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , சங்கத்தில் இயங்குகின்ற உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் , மாமாங்கம் கிராம அபிவிருத்தில் சங்க தலைவரும் , பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம் .உதயராஜ் , சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் உபதலைவரும் , சமாதான நீதவானுமான எஸ் .கனகசபை , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் கே .மாதவன் ,சங்க செயலாளர் ஆர் .லிலோஜினி , பட்டதாரி பயிலுனர் டி . தயானந்த் மற்றும் சங்க உறுப்பினர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வு தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது