கல்முனைப் பிராந்தியத்தில் கொவிற் தொற்றினால் ஐந்து மரணங்கள் பதிவு 841 பேருக்கு தொற்று உறுதி

கல்முனைப் பிராந்தியத்தில்  கொவிட் தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  கொவிட் தொற்று காரணமாக இப்பிராந்தியத்தில் தற்போது ஐந்து மரணங்கள் நிகழ்ந்துள்ளது என என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கொவிட் தொற்று காரணமாக 841 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுமுள்ளனர்.
கொவிட் தொற்று காரணமாக கிழக்கு மாகாணத்தில் மரணமடைந்தவர்களில் எமது கல்முனைப் பிராந்தியத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளது. சம்மாந்துறை, ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை 11947 பி.சி.ஆர் பரிசோதனைகளும், 8302 அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியத்தினைச் சேர்ந்த 593 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அத்தோடு, 248 பேர் இந்நோய்த் தொற்றுக்கான சிகிச்சையினை தற்போது பெற்று வருகின்றனர்.
இப்பிராந்தியத்தில் கொவிட் தொற்று அதிகரித்த சில பிரதேசங்கள் இன்னும் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கல்முனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பிரதேங்களின் சில பகுதிகள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் தற்போது 55 பேரும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 83 நோயாளர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் இந்நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் 323 பேர் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 142 பேர் சிகிச்சை  பெற்றுள்ளனர்.
இத்தொற்று காரணமாக இதுவரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் 310 பேரும், கல்முனை தெற்கு பகுதியில் 190 பேரும், பொத்துவில் பிரதேசத்தில் 76 பேரும்,  அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் 71 பேரும், சாய்ந்தமருது பிரதேசத்தில் 51 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 35 பேரும்,  இறக்காமம் பிரதேசத்தில் 23 பேரும், சம்பாந்துறை பிரதேசத்தில் 18 பேரும், திருக்கோவில் பிரதேசத்தில் 15 பேரும், கல்முனை வடக்குப் பகுதியல் 14 பேரும், காரைதீவில் 13; பேரும், நிந்தவூர் பிரதேசத்தில் 13 பேரும், நாவிதன்வெளி பிரதேசத்தில் 10 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

Related posts