கல்முனை மாநகரில் முடக்கப்பட்ட 11 கிராமசேவையாளர் பிரிவுகளில் ஏழு(7)பிரிவுகள் எமது பிரதேசத்துள் வருகின்றன. அப்பிரிவுகளுள் வாழ்கின்ற வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 10ஆயிரம் ருபா பெறுமதியான நிவாரண உலருணவுப்பொதிகள் விநியோகிக்கப்படவிருக்கின்றன.
இவ்வாறு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தததாவது:
முடக்கப்பட்ட கல்முனையின் 11பிரிவுகளில் வாழும் வருமானம் குறைந்த சுமார் 3500குடும்பங்களுக்கு 10ஆயிரம் ருபா பெறுமதியான நிவாரணஉலருணவுப்பொதிகள் வழங்க மூன்றரைக்கோடி ருபா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட 11பிரிவுகளில் எமது வடக்குபிரதேசத்தில் 1சி 1ஈ 2 2எ 2பி 3 3எ ஆகிய 07பிரிவுகள் உள்ளன. அங்கு 1865 குடும்பங்களைச்சேர்ந்த 6197பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களில் அரசஉத்தியோகத்தர்கள் வங்கிஉள்ளிட்ட வருமானம்கூடிய தொழில் செய்பவர்களை விடுத்து சமுர்த்தி மற்றும் வருமானம் குறைந்த மக்களுக்கு இந்நிவாரணப்பொதி வழங்கப்படவிருக்கிறது.
இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைக்கவேண்டும். என்றார்.
அநேகமாக இன்று(6)புதன்கிழமை முதல் மக்களுக்கு இந்நிவாரணப்பொதிகள் விநியோகிக்கப்படாமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இப்பொதிகள் வழங்கப்படுவதற்கான 14தினங்கள் காலம் ஆரம்பமாகும் திகதி போக்குவரத்து முடக்கப்பட்ட டிசம்பர் 29ஆம் திகதியா அல்லது இராணுவத்தளபதி முடக்கம் பற்றி அறிவித்த ஜன.1ஆம் திகதியா? என்பதில் தெளிவின்மை நிவுவதாகத் தெரிகிறது.