தேசிய மாணவர் படையணியின் மாணவர் குழுக்களுக்கான பயிற்சிப் பாசறை பட்டிருப்பு தேசிய பாடசாலையில் முன்னெடுப்பு
தேசிய மாணவர் படையணியில் மாணவர் குழுக்களுக்கு பயிற்சி வழங்குதல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்வாக கட்டளை சிரேஸ்ட மாணவர் சிப்பாய்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பாசறை பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பயிற்சிப் பாசறையில் மட்டு மாவட்ட மாணவர் சிப்பாய்கள் படையணியின் 38 ஆவது படையின் முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் சி.காண்டீபன் மற்றும் பயிற்சிப் பொறுப்பதிகாரி கப்டன் எம்.எஸ்.எம்.மிப்றாஸ்கான், பட்டிருப்பு தேசிய பாடசாலையின் அதிபர் உட்பட பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம்,பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம்,பட்டிருப்பு தேசிய பாடசாலை,பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலையினையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 45 மாணவர்கள் பயிற்சிப் பாசறையில் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர் சிப்பாய்கள் படையணியானது அமைக்கப்படுவதன் நோக்கம் மற்றும் பாடசாலையில் எவ்வாறு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் போதியளவான உடல் சார் பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.