பொது மக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாப்பரவலை கட்டுப்படுத்தமுடியாது!காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர்

பொது மக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாப்பரவலை கட்டுப்படுத்தமுடியாது. காரைதீவைப்பொறுத்தவரை பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அந்தவகையில் காரைதீவு மக்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.
 
இவ்வாறு காரைதீவு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் அவசர பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
 
காரைதீவில் சடுதியாக ஏற்பட்ட கொரோனாப்பரவல் காரணமாக கூட்டப்பட்ட அவசரபொதுக்கூட்டம் நேற்று சுகாதாரப்பணிமனை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அதில் காரைதீவுப்பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் மற்றும் வணக்கஸ்தலங்களின் தலைவர்கள் முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
அங்கு டொக்டர் தஸ்லிமா கூறுகையில்:
காரைதீவில் நான் முன்னரே 8வருடங்கள் சேவையயாற்றிய அனுபவமுண்டு. இங்குள்ளவர்கள் படித்தவர்கள். நிந்தவூரைப்போல நல்ல ஒத்துழைப்பை வழங்குவார்கள்.
இங்கு அண்மைக்காலமாக கொரோனப்பரம்பல் ஏற்பட்டிருக்கிறது உண்மை.இதுவரை 64பேருக்கு தொற்று. ஆனால் அனைத்தும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டதே.
 
 அதனால் நாம் ஏனையவர்களுக்கு தொற்றாமல் பூரண நடவடிக்கைஎடுத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளோம்.எமது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஏனைய ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமைக்கு மேலாக பணியாற்றுகிறார்கள்.
மரணவீடுதிருமணவீடு மற்றும் ஒன்றுகூடல்கள் மட்டுப்படுத்தப்படவேண்டும். இனிமேல் கூடிய கண்காணிப்பு இருக்கும். 25பேருக்கு மேல் அனுமதியில்லை. மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.உங்களுக்காகவே நாம் சேவையாற்றுகிறோம் என்றார்.
 
பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் கூறுகையில்:
பலமாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த கல்விச்செயற்பாடுகள் அண்மையில்தான் மீளத்திரும்பஆரம்பித்தன.அதற்குள் இப்படியான சடுதியான பரம்பல் அச்சத்தை கொடுத்துள்ளது. இதிலிருந்து மீள நீண்டநாட்கள் எடுக்கலாம்.எனவே மக்களின் மனோபாவத்தில் தைரியத்தை ஊட்டவேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.என்றார்.
ஊர்ப்பிரமுகர்களின் கருத்தும் கேட்டறியப்பட்டன.

Related posts