தடுப்பூசி வழங்கலில் கல்முனை ஆதார வைத்தியசாலை முன்னணியில்.முதல்நாளில் 264பேருக்கு

கல்முனைப்பிராந்தியந்தில்  தடுப்பூசி வழங்கலில்  கல்முனை ஆதார வைத்தியசாலை முன்னணியில் திகழ்கிறது.
அங்கு முதல்நாளில் 264பேருக்கு ஏற்றப்பட்டது என உதவிவைத்தியஅத்தியட்சகர் டொக்டர் ஜே.மதன் தெரிவிககிறார்.
 
முதல்ஊசிஏற்றி தானே ஏற்றி வைத்தியஅத்தியட்சகர் டொக்டர் இரா.முரளீஸ்வரன்  ஏனையோருக்கு முன்மாதிரியாகத்திகழ்ந்தார் எனவும் அவர் மேலும் கூறினார்.
கல்முனை பிராந்தியத்தில் நேற்று 30ஆம் திகதி  ஆரம்பமான கொரோனா தடுப்பூசி வழங்கலின் கணக்கு விவரங்களின் படி நாவிதன்வெளி 29கல்முனை தெற்கு 144 சாய்ந்தமருது  50 காரைதீவு 50நிந்தவூர் 29அட்டாளச்சேனை 170அக்கரைப்பற்று 40 ஆலையடிவேம்பு 72திருக்கோவில் 40பொத்துவில் 80 இறக்காமம் 30சம்மாந்துறை 20கல்முனை வடக்கு 264 என்ற வீதத்தில் முதல்நாளில் ஏற்றப்பட்டிருக்கிறது.
வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி  இரா. முரளீஸ்வரன் துரித வழிநடத்தலில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நேற்று காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணிவரை 264 சேவையாளர்களுக்கு தடுப்பூசியை வழங்கி கல்முனை பிராந்தியத்தில் முன்னிலையை வெளிப்படுத்தியுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் மகத்தான சேவை.இன்றைய நாள் செயற்பாட்டில் பலர் தியாக மனத்துடன் பங்காற்றியுள்ளனர். என திட்டமிடல் வைத்திய அதிகாரியும்இ தொற்று தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியுமான  டொக்டர் ஜே. மதன்  தெரிவித்தார்.
வரலாற்றில் முதற்தடவையாக கல்முனைப்பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்ட 4870 தடுப்பூசிகளில் 850 கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
நேற்று(30)சனிக்கிழமை காலை முதல்ஊசி வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனுக்கு ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பிரதிஅத்தியட்சகர் டாக்டர் ஜே.மதன் வைத்தியநிபுணர்களான சு.திலக்குமார் வி.இதயகுமார் டாக்டர் சோ.திருமால் உள்ளிட்ட வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts