காத்தான்குடி தவிசாளரினால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பகுதியைநீக்குவதற்கான அறிப்பானது சட்ட ரீதியற்றது

காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்து சிவப்பு வலயமாகவே இருந்துவருவதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

காத்தான்குடி தவிசாளரினால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பகுதியை நீக்குவதற்கான அறிப்பானது சட்ட ரீதியற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நேற்று 2767 சுகாதாரதுறை சேர்ந்தவர்களுக்கு கொரனா தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதன் மூலம் பாரியளவிலான எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லையெனவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் கல்முனை பிராந்தியத்தில் இரண்டு மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 16தொற்றாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கொரனா செயலணியின் அறிவுறுத்தல் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அறிவிப்பினை உள்ளுராட்சிமன்ற தலைவர்கள் நீக்குவதற்கான அதிகாரம் இல்லையெனவும்,காத்தான்குடி தவிசாளர் மேற்கொண்ட நடவடிக்கை சட்ட ரீதியற்றனை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் கடந்த 12மணித்தியாலங்களில் 19கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் 20404பேர் கொரனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் 2082பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலையில் 466பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 588பேரும் அம்பாறையில் 147பேரும் கல்முனை பிராந்தியத்தில் 1208பேரும் கொரனா தொற்றுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, கிண்ணியா, அம்பாறை, காரைதீவு, அக்கரைப்பற்று,காத்தான்குடி,குச்சவெளி ஆகிய ஏழு பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக இருந்துவருகின்றன.கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த 329பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் ஒன்பது வைத்தியசாலைகள் சிகிச்சை நிலையங்களாக செயற்படுகின்றன.அவற்றில் 3690 நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.தற்போது 375பேர் தங்கி சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

தொடர்ச்சியாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதாகவும் சில பகுதிகளில் மக்களின் ஒத்துழைப்பு போதியளவு கிடைக்காத நிலையுள்ளது.காத்தான்குடியில் 10கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றது.மட்டக்களப்பின் ஒரு கிராம சேவையாளர் பகுதியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.சில பகுதிகளில் சில மக்களினாலும் சில குழுக்களினாலும் எங்களது சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக சுகாதார சேவைகள் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சில அதிகாரிகளுக்கும் சில உள்ளுராட்சிமன்ற தலைவர்களுக்கும் சில முடிவுகளை எடுக்கின்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் முழுமையாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஒரு பிரகடனத்தினை மீறி செயற்பட்டமுடியாது.

காத்தான்குடி பகுதியில் கொரனா செயலணி நேற்றும் இன்றும் ஒன்றுகூடி பரிசோதனைகள் தொடர்பில் ஆராயும்போது ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் தாண்டவில்லை.ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாளைக்கு குறைந்தது 150க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படவேண்டும்.அவ்வாறு செய்யும்போதுதான் உண்மையான நிலைவரத்தினை அறியமுடியும்.இரண்டு வாரங்களுக்கு முன்பாக காத்தான்குடியில் எட்டு கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.ஆனாலும் தாக்கமானது முற்றுமுழுதாக நீங்கவில்லை.

எங்களைப்பொறுத்தவரையில் அங்குள்ள மக்களை பாதுகாப்பதே எமது உண்மையான நோக்கமாகும்.அதனடிப்படையில் எதிர்வரும் மூன்று தினங்களில் இங்கிருந்து இரண்டு விசேட அணிகளை அனுப்பி மொத்தமாக 800க்கும் மேற்பட்ட பீசிஆர் பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பகுதி சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டள்ளது. அதன்காரணமாக அன்டிஜன்,பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.அதன் பிறகு அந்த பகுதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.நான்கு நாட்களுக்குள் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.

சில பகுதிகளில் தனிப்பட்ட அரசியல்கள் காரணமாக எங்களது செயற்பாடுகள் பின்னடைவுகளையோ சவால்களையோ எதிர்கொண்டிருக்கின்றோம்.அனைத்து பகுதி மக்களுக்கும் நாங்கள் சமமான சேவைகளையே முன்னெடுத்துவருகின்றோம்.எமது மூத்த பிரஜைகளை பாதுகாக்கவேண்டும் என்பதன் அடிப்படையிலேயே நாங்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.

எனக்கெதிராகவும் பிராந்திய சுhதார பணிப்பாளருக்கு எதிராகவும் பல வகையான விமர்சனங்கள் முகப்புத்தகங்கள் ஊடாக முன்வைக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் அவற்றினையெல்லாம் நாங்கள் பெரிய விடயங்களாக கருத்தில்கொள்ளவில்லை.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டளையினை காத்தான்குடி தவிசாளரினால் எந்த அதிகாரத்தின் கீழ் நீக்கப்படமுடியும் என்பது நகைப்புரியதாக காணப்படுகின்றது.தனிமைப்படுத்தல் கட்டளையினை நீக்குவதானது சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் மட்டுமே செய்யமுடியும்.நாங்கள் கூட அதனை செய்யமுடியாது.நாங்கள் சிபார்சினை வழங்குவோம்.அதனை அனுப்பும்போது அவர் எங்களுடன் தொடர்புகொண்டு நாங்கள் வழங்கும் பதில்கள் அவருக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்திலேயே அவர் இது தொடர்பான அறிவிப்பினை தேசிய கொரனா செயலணிக்கு அறிப்பார்.இதுதான் வழிமுறையாகும்.ஆனர் காத்தான்குடி தவிசாளரின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை நீக்குவது தொடர்பான கடிதமானது சட்ட ரீதியற்றதாகவே கருதவேண்டியதாகும்.

Related posts