இளைஞர்களின் விளையாட்டு ஆற்றல்களை தேடிச்செல்லும் Talent Hunt தேசிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வாழ் இளைஞர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டு ஆற்றல்கள் மற்றும் திறமைகளை அறிந்து கொள்ளுதல், விஞ்ஞான ரீதியிலான முறைமைகளை பயன்படுத்தி இளைஞர் சமூகத்தை விழிப்படைய செய்தல் மற்றும் அவர்களிடம் மறைந்து இருக்கும் உடல் உள பலத்தினை விழிப்படையச் செய்து இலங்கையின் விளையாட்டு துறைக்கான திறமைகளை பெறக்கூடிய இளம் சந்ததி ஒன்றை தேசிய மட்டத்திற்கு அறிமுகப்படுத்துதல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் தொடர்புபடுத்துவதற்கு இளைஞர் யுவதிகள் சிறந்த உடல் வலிமை மற்றும் உடல் ஆரோக்கியம் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் ஒருபோதும் எந்த ஒரு விளையாட்டிலும் ஈடுபடாத போதிலும் எதிர்காலத்தில் அவர்களிடம் உள்ள திறமைகளின் அடிப்படையில் ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டி பிரிவுக்கு ஈடுபடுத்துவதற்கு விருப்பம் உள்ள நபர்களாக இருத்தல் வேண்டும் மற்றும் வயதெல்லை 15 தொடக்கம் 25க்கு இடைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் எதிர்கால தொழில் இலக்கொன்றை தேடிச் செல்வதற்கு விருப்பம் காட்டுகின்ற ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் குறைந்தபட்சம் க.பொ.த (சா/தரம்) பரீட்சையில் தோற்றிய நபராக இருத்தல் அவசியமாகும். விசேட உடல் தகமை மற்றும் விசேட தேர்ச்சி கொண்டவராக உணர்வீர்களாயின் அவர்களின் கல்வித் தகமை,வயதெல்லை தொடர்பில் கவனத்தில் கொள்ள படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக தகவலுக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தருடன் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் தெசார ஜயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்