இலங்கையைப் பொறுத்தவரையில் சுகாதார துறையினருக்கு ஏன் இந்த மூவின சமூகத்தினருக்கும் சவாலாக அமைந்த ஒரு விடயம்தான் உணவு பாதுகாப்பு கழழன ளநஉரசவைல.என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப்பிராந்தியத்தில் காணப்படும் 230 ஹோட்டல்களில் யு தரத்தை பெற்றுக்கொண்ட ஐந்து ஹோட்டல்களின் உரிமையாளர்கள் பணிமனைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிமனையில் நேற்று நடைபெற்றது.
அங்கு பணிப்பாளர் சுகுணன் மேலும் பேசியதாவது.
தொற்று நோய்களும் தொற்றா நோய்களான சிறுநீரக பாதிப்பு கன்சர் போன்ற கடுமையான நோய்களும் எம்மைத் தாக்க காரணமாக அமைகிறது இந்த உணவுப்பாதுகாப்பு.
உணவு பாதுகாப்பு என்பது உணவுக்கான பொருட்களை பயிரிடும் இடத்தில் தொடங்கி போக்குவரத்து சேமித்தல் பதப்படுத்துதல் நுகர்வுப் பொருட்களை தயாரித்தல் விநியோகித்தல் வரை நீள்கிறது.
எமது நாட்டில் வளர்ச்சி அடைந்த நாடுகளை போன்ற மிகச் சரியான ஒழுங்கு முறைகள் காணப்பட்டாலும் நடைமுறையில் பல சிக்கல்கள் அத்துமீறல்கள் காணப்படுவதால் சுகாதாரத் துறையினர் ஆகிய நாங்கள் பாரிய பங்களிப்பை ஏற்க வேண்டிய பொறுப்பு தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் உணவுப் பாதுகாப்பை நிச்சய படுத்துவது எமது கடமை.
சந்தைகள் இறைச்சி வெட்டும் தொழுவங்கள் பேக்கரிகள் கோட்டல்கள் இவற்றில் மிக முக்கியமானவை.
இந்த விடயத்தில் சகல ஹோட்டல் களையும் தரம்பிரித்து தந்த அனைவருக்கும் நன்றி கூறுவதுடன் எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் கடுமையாக கல்முனைப் பிராந்தியத்தில் எடுக்கப்படும் என்ற தகவலை உணவுகளை கையாள்பவர்கள் அறியவும் தருகின்றோம்.