(BUDS – Batticaloa) மண்முனை மேற்கு கல்வி வலய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தினரால் (BUDS – Batticaloa)  மண்முனை மேற்கு கல்வி வலய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு.

 
மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கமானது மட்டக்களப்பைச் சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்டு மட்டக்களப்பின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளை கடந்த 33 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றது.
 
அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று(07) மட்/மமே/ குறிஞ்சாமுனை அ.த.க பாடசாலையில் இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கென தொடர்ச்சியாக BUDS அமைப்பினரால் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் 39 பாடசாலைகளைச் சேர்ந்த 1004 மாணவர்களுக்கு 4500 அப்பியாசக்கொப்பிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி. அகிலா கனகசூரியம், BUDS- UK  அமைப்பின் உப தலைவர் தயாபரன், முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர்களான கே. சத்தியநாதன், திருமதி. சுபாச்சக்கரவர்த்தி, மண்முனை மேற்கு உதவி வலயக்கல்வி பணிப்பாளர் யசோதரன், BUDS – Batticaloa அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலை அதிபர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்

Related posts