தொல்பொருள் பாரம்பரியம் தொடர்பான விழிப்புனர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளுக்கும் இரானுவ உத்தியோத்தர்களுக்குமாக தொல்பொருளியல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் (20) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க பிரதம அதியாகக் கலந்து கொண்டு தொல்பொருள் பாரம்பரியம் தொடர்பான விளக்கமளித்தார்.
மேலும் தொல் பொருள் சின்னங்களைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் தொல்பொருளியல் திணைக்கள பதில் மேலதிக பணிப்பாளர் பிரசன்ன பீ. ரத்நாயகவும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தொல்பொருள் திட்டம் தொடர்பாக ஆய்வு உத்தியோகத்தர் திருமதி முத்து தென்னகோன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்மளித்தனர்.
இவ்வழிப்புனர்வு செயலமர்வில் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவான், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிதியட்சகர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்களும், கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ பிரிவுகளுக்குமான கட்டளை அதிகாரிகளும், மாவட்ட தொல்பொருள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.