தையற்பயிற்சி பெற்றிருந்தும் இதுவரை யாரும் உதவவில்லை!

எனது குடும்பத்தில் 7பேர். நான்கு பெண்களுடன் பிறந்த நான் தையற்பயிற்சியைப் பெற்றிருந்தும் பலரிடம் கோரிக்கைவிடுத்தும் இதுவரை யாரும் ஒரு தையல்இயந்திரம் வழங்கமுன்வரவில்லை. தற்போதுதான் பிரான்சில் பிறந்த கர்ணிகா என்றகுழந்தையினால் தையல்இயந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. வாழ்க்கையில் இன்றையநாளை  மறக்கமுடியாது.
 
இவ்வாறு ஆலையடிவேம்புப்பிரதேசத்திலுள்ள மளவராயன் மீள்குடியேற்றக்கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் பலத்தஇன்னலுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் எஸ்.அனுஜா என்ற பெண் கவலை கலந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 
அம்பாறை மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் முயற்சியால் பிரான்ஸ்நாட்டில் 5வயதில் மறைந்த கர்ணிகா ஞாபகார்த்தமாக ஒரு தொகுதி உதவிகள் பலஇடங்களிலும் வழங்கப்பட்டுவருகின்றது.
 
அதன்ஓரங்கமாக  ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பின்தங்கிய மளவராயன் மீள்குடியேற்றக்கிராமத்தில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்  வறிய குடும்பம் ஒன்றிக்கு தையல் இயந்திரம்  வழங்கி வைக்கப்பட்டன. அவ்வமயம் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தவிசாளர் கே.ஜெயசிறில் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
 
தையல்இயந்திரத்தைப் பெற்றுக்கொண்ட அனுஜா மேலும் கூறுகையில்:
இன்று தவிசாளர் ஜெயசிறில் ஜயா மூலமாகக்கிடைக்கப்பெற்ற இத்தையல் இயந்திரத்தை வைத்து எனது குடும்பத்தைக் காப்பாற்றுவேன். எனது சகோதரிகளை படிக்கவைப்பேன். வாழ்வாதாரத்தை உயர்த்துவேன். உண்மையில் கர்ணிகாவின் பெற்றோருக்கும் இதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் இருகரம்கூப்பி நன்றிதெரிவிக்கிறேன் என்றார்.

Related posts