ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களுக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மட்டக்களப்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களுக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மட்டக்களப்பு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்துள்ள பொதுமக்கள்,நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் உறவுகளின் இரண்டாவது நினைவுதினம்  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை(21)காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்துள்ள உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு,அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது மிலேசத்தனமான குண்டுத்தாக்குதலில் பலியாகிய உறவுகளுக்கு இரண்டு நிமிடம் மௌன இறைவணக்கம் செய்யப்பட்டதுடன் உயிரிழந்துள்ள அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,உயிரிழந்து உறவுகளின் உறவினர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளயர் தலைமையுரை ஆற்றுகையில்..நாட்டிலே கடந்த 2019.4.21ஆம் திகதி நடைபெற்ற மிலேச படுகொலையினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் ,பலர் இன்று சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளாக பொருளாதார வசதிகள் இன்றி காணப்படுகின்றார்கள்.பாதிக்கப்பட்டவர்களுக்கும்,உயிரிழந்த குடும்பத்தாருக்கும் அரசாங்கம் உதவிகளை செய்யவேண்டும்.இவ்வாறான அனர்த்தம் நாட்டிலோ அல்லது வேறோரு இடத்திலோ எதிர்காலத்தில் இடம்பெறாமல் பாதுகாக்க வேண்டும்.இதனை மறந்து புதியதொரு இலக்கை நோக்கி பயணிப்போம் எனத்தெரிவித்தார்.

Related posts