மட்டக்களப்பு சந்திவெளியில் இரு குழுக்களுக்கிடையே மோதல்.இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு சந்திவெளியில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு இருவருக்கிடையில் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளியில் பாலையடித்தோனா பகுதியில் புதன்கிழமை(12)மாலை இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.தனிப்பட்ட பிரச்சினை கருத்து மோதல் காரணமாகவே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்து மோதல் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே வெட்டுக்கு இலக்காகி இவ்வாறு சிசிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த பகுதியில் தற்போது இரவு வேளைகளிலும் பெரும்பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக அப் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள்,பெண்கள் கவலையடைந்து தமது ஆதங்களை தெரிவிக்கின்றார்கள்.இவ்வாறான குற்றச்செயல்களுக்கு பிரதான காரணம் போதைப்பொருள் பாவனையாகும்.போதையற்ற நாட்டை உருவாக்க வேண்டும் எனும் ஜனாதிபதியின் எண்ணத்தை பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கவனம் இல்லாமல் செயற்படுவதாகவும்,பல வாள்வெட்டு குழுக்கள் மாவட்டம் முழுவதும் நடமாடுவதாகவும் ,இவர்களுக்கு அரசபடைகள் ஏன் தக்க நடவடிக்கை இதுவரையும் எடுக்கவில்லை எனவும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.