கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நாள் முதல் உரிய ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும்

ஏற்கனவே வெளியாகியுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற பெயர்பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள  ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நாள் முதல் உரிய ஆசிரியர்களுக்கு கடிதம்  அனுப்பி வைக்கப்படும் என கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி இன்று வியாழக்கிழமை(13) தெரிவித்தார்.

அவரிடம் ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்….

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தால் கடந்த மாதம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு மாகாண மட்டத்திலான இடமாற்ற பெயர்பட்டியல் இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்பட்டு இம்மாதம் 17ஆம் திகதி இடமாற்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கடமையை பொறுப்பேற்கும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இதன்பிரகாரம் நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரு வாரங்களாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது.கல்வி அமைச்சரின் அறிவித்தலுக்கு இணங்க மறு அறிவித்தல் வரையும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இடமாற்ற பெயர்பட்டியலில் காணப்படும் ஆசிரியர்கள் புதிய பாடசாலைக்கு கடமையை பொறுப்பேற்பதலில் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பாரியதொரு குழப்பநிலையில் காணப்படுகின்றார்கள்.எனவே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது இடமாற்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதம் அனுப்பிவைக்கப்படுமென மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts