கொரனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கத்தினால் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் இயல்பு நிலை முழுமையாக முடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரைத் தவிர ஏனையவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.
அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாற்றமற்ற சூழலை அவதானிக்க முடிகிறது.