ஆரையம்பதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளை இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று வழங்கிவைப்பு.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேரில் சென்று வழங்கிவைத்தார்.
 
அரசாங்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் வறிய மக்களுக்கு சுமார் 10,000 ரூபாய் பெறுமதியான  உலர் உணவுப் பொருட்களை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்  கிரான்குளம் பிரதேசத்திலுள்ள 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கும் 467 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு மக்களை சிரமத்திற்குள்ளாக்காதவாறு, வீடு வீடாக சென்ற இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களை நலம் விசாரித்ததுடன், குறைகளையும் கேட்டறிந்துகொண்டு அவர்களுக்கான நிவாரண பொதிகளையும் வழங்கிவைத்தார்.
 
குறித்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, கிரான்குளம் பகுதிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட இணைப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts