மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 84 பேருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கோவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேவேளை, மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 20 பேருக்கும், களுவாஞ்சிக்டியில் 2 பேருக்கும், வாழைச்சேனையில் 2 பேருக்கும், காத்தான்குடியில் 15 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோறளைப்பற்று மத்தியில் 7 பேருக்கும், ஓட்டமாவடியில் 4 பேருக்கும், செங்கலடியில் 7 பேருக்கும், ஏறாவூரில் 8 பேருக்கும், பட்டிருப்பில் 4 பேருக்கும் , ஆரையம்பதியில் ஒருவருக்கும், கிரானில் 3 பேருக்கும், பொலிஸார் 3 பேருக்கும், சிறைக்கைதிகள் 6 பேரும் உட்பட 84 பேருக்குத் தொற்று இன்று செவ்வாய்க்கிழமை (01) கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்லுகின்றது, எனவே பொதுமக்கள் பயணைத்தடையை மீறி வீட்டிலிருந்து தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.