கிழக்கில் 233பேர் பலி: 60ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன!மட்டக்களப்பில் தொற்று 4000 கடந்தது:கிழக்கில் 11744தொற்றுக்கள்

கிழக்கு மாகாணத்தில் நேற்று(16)வரை கொரோனாவுக்கு 233பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 207பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்களாவர். திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 119பேர் மரணித்துள்ளனர்.
 

கிழக்கில் இதுவரை  மரணித்த 23பேரில்  திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 121பேரும், அம்பாறைப்பிராந்தியத்தில் 23 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 59 பேரும்  ,   கல்முனைப்பிராந்தியத்தில்  30 பேரும்  மரணித்துள்ளனர்.

இதே வேளை கடந்த 6நாட்களாக கிழக்கில் 60139பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மட்டு.மாவட்டத்தில் 22279பேருக்கும் ,அம்பாறை பிராந்தியத்தில் 21504  பேருக்கும், திருமலை மாவட்டத்தில்   16063பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.
 
கல்முனைப்பிராந்தியத்திற்கு இதுவரை தடுப்பூசி செலுத்தும்பணி ஆரம்பிக்கப்படவில்லை.
 
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 11744பேருக்கு கொரொனாத்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4000ஜக் கடந்த தொற்று நேற்றுவரை 4038ஆகியது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய 4038 பேரும்,     திருகோணமலை 3844பேரும்  ,அம்பாறைப்பிராந்தியத்தில் 1791 பேரும், கல்முனைப்பிராந்தியத்தில்  2071 பேரும்  தொற்றுகுள்ளாகியுள்ளனர்.
 
கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்ட புள்ளவிபரங்களிலிருந்து இதனை அறியமுடிகிறது.
 

Related posts