கடந்த் 3ம் திகதி சந்திரன் விதுஷன் ஜஸ்போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத் இரகசிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 3ம் திகதி மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களின் தலமையிலான சட்டவைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த இளைஞன் அதிகளவான ஜஸ் போதைப்;பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இவரின் மரணம் தொடர்பான வழக்கில் மரணமானவரின் குடும்பத்தினர் சாட்சியம் அளிக்கையில் தங்களின் மகனின் பிரேத பிரிசோதயில் சந்தேகம் இருப்பதாக அதற்கான நீதி கிடைக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.குறித்த வழக்கானது இன்று(18) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதியின் அறையில் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் முன்நிலையில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.
புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை வருகின்ற திங்கட்கிழமை தோண்டி எடுத்து இலங்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர் அவர்களின் தலமையில் பிரேத பரிசோதனை செய்ய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.