சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வளத்தாப்பிட்டிக் கிரமத்தில் பால்மா மற்றும் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.



(சா.நடனசபேசன்)
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையிலும் கொவிட் 19 காரணமாகத் தணிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அம்பாரை வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் சிறுவர்களுக்கான பால்மாப் பைகளும் வழங்கிவைக்கும் நிகழ்வு 18ஆம் திகதி  இடம்பெற்றது.


இதன்போது அங்குவசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1250 ரூபா பெறுமதியான 109 பேருக்கான உலர் உணவுப்பொதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மாப்பைகளும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டதுடன் மொத்தமாக 1 இலட்சத்து 55 ஆயிரம் பெறுமதியுடைய உலர் உணவுப்பொதிகள் மற்றும் பால்மா பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கணக்காய்வாளர் துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர் நாகேந்திரன் ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன், ஆசிரியர் குணசேகரம்,வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர் கணேஸ் உட்பட பலர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் வளாத்தாப்பிட்டிக்கிராமத்தின் பிரமுகர்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இம் மக்களுக்கான நிதி உதவியினை சுவிஸ் நாட்டில் வாழும் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் கே.துரைநாயகம் மற்றும் அவ் அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் இவ் நிதியை வழங்கி மக்களுக்கான உதவிகளைச் செய்துள்ளனர்.
இவ் உதவிகளை வழங்கிய சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்கம் மற்றும் கிழக்குமாகாணக்கிளை உறுப்பினர்கள் அனைவருக்கும் அப்பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்

 

Related posts