சபீஸின் “அயலவருக்கு உதவுவோம்” திட்ட ஆரம்ப கட்ட உதவி : அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் முன்னெடுப்பு

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த அம்பாறை மாவட்ட மக்களின் பசி போக்கும் தன்மையை கவனத்தில் கொண்டு அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்களினால் முன் வைக்கப்பட்ட “அயலவருக்கு உதவுவோம்” திட்டத்தின் ஆரம்ப கட்ட உதவிகள் நேற்றும், இன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் தலைமையிலான “அயலவருக்கு உதவுவோம்” திட்டத்தின் செயற்பாட்டாளர்கள் பயணத்தடை காரணமாக தொழிலை இழந்த, வருமானமில்லாத, கஷ்டப்படும் அம்பாறை மாவட்ட காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி அன்னமலை போன்ற பிரதேசங்களுக்கு இன, மத, பிரதேச வாதங்கள் எதுவுமில்லாது வழங்கிவைத்தனர். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் இந்த வேலைத்திட்டத்தை இனிவரும் காலங்களில் அம்பாறை மாவட்ட சகல தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க உள்ளதாக தெரிவித்ததுடன் இந்த பசி போக்கும் தூய பணிக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள் தாமாக முன்வந்து இணைத்துக்கொள்ள முடியும் என்றார்.

Related posts