சம்மாந்துறையில் வீதிகளில் உலாவித்திருந்தோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; இரவு பகல் பாராது களத்தில் சுகாதார துறை!

சம்மாந்துறையில் வீதிகளில் உலாவித்திருந்தோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; இரவு பகல் பாராது களத்தில் சுகாதார துறை!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில்  நடமாடும் வியாபாரிகள்,பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருக்கும் இவ் வேளையில் வீதிகளில்  உலாவித்திரிவோர்  என 25 பேருக்கு  எழுமாறாக  இன்று (20 ) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் ஆலோசனையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை உதவி சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.எம் நியாஸ்  தலைமையில் சுகாதார பரிசோதகர்களான சி.பி.எம் ஹனீபா,எம் இலங்கோவன்,பி,இலங்கோ,எம்.றஜ்குமார்,டி.டினேஷ்,எம்.ஐ.எம் ஹனிபா மற்றும் இராணுவத்தினர் பங்களிப்புடன்  இடம் பெற்றது.

மேற்கொள்ளப்பட்ட   பி.சி.ஆர் பரிசோதனை மாதிரிகள்   பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  அனுப்பிவைப்பட்டுள்ளாதாக   சம்மாந்துறை உதவி சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.எம் நியாஸ் தெரிவித்தார்.

Related posts