பாண்டிருப்பில் இயங்கிவரும் GK சினிமா திரையரங்கு நிறுவனத்தினரால் 20 இலட்சம் செலவில் நிவாரணம்

எஸ்.சபேசன்

  கல்முனை பாண்டிருப்பில் இயங்கிவரும் GK சினிமா திரையரங்கு நிறுவனத்தினரால் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அம்பாரை மாவட்டத்தில் வழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு அம்பாரைமாவட்ட மேலதிக அரச அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் இன்று 20 ஆம் திகதி காலை திரையரங்கில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது
 
இந்த மனிதநேய நிவாரணப்பணிக்கு 20 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்  1200 பேருக்கு GK சினிமா திரையரங்கு நிறுவனத்தினரால் வழங்கிவைக்கப்பட்டன
இந்தப் பிரதேசத்தில் மனித நேய நிவாரணப்பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் GK சினிமா திரையரங்கு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த ந. இராஜேஸ்வரன்(ராஜு) அவர்களால் மேலதிக அரச அதிபர் ஜெகதீசன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டது.
 இந்த நிவாரணப் ,பணியானது, பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு ,கல்முனை, நற்பட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி, துரைவந்தியமேடு, மணற்சேனை, சொறிக்கல்முனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் பெரியகல்லாறு போன்ற கிராமங்களில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வழங்கிவைக்கப்படது    

 
 

Related posts