யாருக்கும் வாக்களியுங்கள் ஆனால் கட்டாயம் வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்!

வடக்கு கிழக்கில் உள்ள 18, வயதை பூர்த்தி செய்த அனைவரும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் இடம்பிடிக்கும் வண்ணம் சம்மந்தப்பட்ட கிராம சேவை அலுவலர்களை அணுகி உறுதிப்படுத்தி எதிர் வரும் தேர்தல்களில் விரும்பிய கட்சிக்கு விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் தகுதியை பெறுமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பாக தப்போது கிராமசேவை அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்.
 
தற்போது 2021 ஆம் ஆண்டுக்காக தேருநர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா நோய் காராணமாக கிராம சேவை அலுவலர்கள் வீடுவீடாக சென்று இம்முறை படிவங்களை வினியோகிக்கமாட்டார்கள்.
 
ஆனால் 2020, ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து புதிதாக 18, வயதை பூர்த்திசெய்த அனைவரும் தமது அடையாள அட்டைகளை காட்டி பிறந்த திகதியை குறிப்பிட்டு வாக்காளராக பதியும் படி வேண்டுகின்றோம்.
 
இதேவேளை முதலில் 2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் உங்களது பெயர் இருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
 
2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பெயர் இல்லாவிட்டால் 2021/ER படிவத்தினை பூர்த்தி செய்து நீங்கள் சாதாரணமாக வதிகின்ற பிரிவு கிராம சேவையாளரிடம் கையளித்து உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்
 
பெயர் இருக்கின்றது ஆனால் பதிவில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனினும் உங்கள் பிரிவு கிராம அலுவலரை தொடர்பு அதை திருத்தம் மேறகொள்ள முடியும்.
 
பெயர் இருக்கின்றது அதில் மாற்றம் எதுவும் அவசியமற்றது எனில் நீங்கள் இம்முறை எதுவும் செய்யவேண்டியதில்லை. உங்கள் பெயர் 2021 ஆம் ஆண்டு இடாப்பில் வழமை போல் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அதற்கான சகல 2021/ER படிவத்தினை நீங்கள் உங்கள் பிரிவு கிராம அலுவலரிடம், பிரதேச செயலகத்தில் பெறலாம்
அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின்
இணையத்தளத்தில் தரவிறக்கிக் கொள்வாய்புகளும் உள்ளது.
 
இருந்தபோதும் இந்த விடயம் வாய்புகள் சாதாரண மக்களுக்கு சென்றடைவது குறைவு தெரிந்தவர்கள் தெரிநாதவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தவேண்டும்.
 
2021 யூன் 1 ஆம் திகதிக்கு முன் 18 வயது பூர்த்தியடைந்தவர்களையும், 2020 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் தமது பெயரை பதியத் தவறியவர்களையும் உங்களுக்கு தெரிந்திருந்தால், விடயத்தை தெரியப்படுத்தி பதிவு செய்ய ஊக்குவியுங்கள்
 
இம்முறை பதிவின் போது புதிய முறை பின்பற்றப்படுகின்றது. வீடு வீடாக பி.சி. படிவம் வழங்கப்பட்டு அதனை மீளவும் பெற்று பதியும் முறை இம்முறை இருக்காது. அதற்கு பதிலாக 2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பினை அடிப்படையாக வைத்து அதில் சேர்க்க வேண்டிய பெயர்களை சேர்க்கவும், நீக்க வேண்டிய பெயர்களை நீக்கவும் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
ஒரு பொறுப்பு வாய்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற காரணத்தால் இந்த விடயங்களை எமது மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே விபரமாக தெரிவித்துள்ளேன்.
 
தேர்தல்கள் பல வரும் போகும் யாரும் யாருக்கும் எந்த கட்சிக்கும் வாக்களிக்கலாம் அது ஜனநாயக உரிமை ஆனால் கட்டாயம் வாக்களர்களாக இணைவது ஒவ்வொருவரின் உரிமை எனவும் மேலும் கூறினார்.

Related posts