வரலாற்று சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்தஆடிவேல்விழா கொடியேற்றத் திருவிழா (10) சனிக்கிழமை சுகாதாரமுறைப்படி நடைபெற்றது..
ஆலய கொடியேற்றமானது கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு. சீதாராம குருக்கள் தலைமையிலான குருமார்களினால் இவ் கொடியேற்ற திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தில் விசேட யாகங்கள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்று நண்பகல் வேளையில் கொடித் தம்பத்தில் கொடியேற்றப்படதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கான தீபாராதணைகளும் இடம்பெற்று இருந்தன.
அதற்கு அமைவாக லாகுகல பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களால் ஆலய முன்றலில் ஆலய நிருவாகம் உற்பட அனைவரும் அன்ரீஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகளை குருமார்கள் முன்னெடுத்து இருந்தனர்.
இந்நிலையில் உகந்தை மலை ஸ்ரீமுருகன் ஆலயத்தின் கொடியேற்றமானது வேதாகம மந்திர மேள வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டு இருந்ததுடன் விசேட பூஜைகள் இடம்பெற்று இருந்தன
ஆலய கொடியேற்றத்தினைத் தொடர்ந்து ஆலயத்தில் 15 நாட்கள் பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்று உகந்தைமலை முருகப் பெருமானின் கிருபையால் எதிர்வரும் 25ந் திகதி தீர்த்தோற்சவத்துடன் இவ் ஆண்டுக்கான வருடார்ந்த உற்சவம் நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.