மிகமோசமாக பரவிவரும் கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே மருந்து.எனவே அதனை அலட்சியம் செய்யாது 30வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுங்கள்.
என்று காரைதீவில் 6 தடுப்பூசி ஏற்றும் மையங்களில் அப்பணியை ஆரம்பித்துவைத்துப் பேசிய காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமாபஷீர் வேண்டுகோள்விடுத்தார்.
சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையி ல் களப்பணியாளர்கள் முன்னிலையில் அவர் தடுப்பூசி ஏற்றுகையில் பணியாளர்கள் செயற்படும் நடைமுறைவிதிகள் பற்றி விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் முதல்நாள்(24)சனிக்கிழமை மொத்தமாக 1930 பேர் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டுள்ளனர் என வைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா தெரிவித்துள்ளார்.
காரைதீவில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பொது இடங்களில் தடுப்பூசி ஏற்றும் மையங்கள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருகின்றன. இவ் நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியினை பெற்று வருகின்றமை விஷேட அம்சமாகும்.
அதற்கமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி சனிக்கிழமை காலை 7.30 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது.
காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை ,காரைதீவு பிரதேச வைத்தியசாலை ,இ.கி.மி.பெண்கள் பாடசாலை சண்முகா மகா வித்தியாலயம், மாவடிப்பள்ளி அல்அஸ்ரப் மகா வித்தியாலயம் ,மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலயம் ஆகிய ஆறு மையங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது.
களப்பணியாளர்களுடன் கடற்படை இராணுவம் பணியிலீடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இருதினங்களில் அரச அதிகாரிகள் மக்களுடன் நேரடி தொடர்பை கொண்டிருப்போர் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பிராந்திய ஊடகவியலாளர்கள் ,ஆசிரியர்கள் ,அதிபர்கள் ,60 வயதுக்கு மேற்பட்டோர், கற்பிணி தாய்மார் என பலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணி சிறப்பாக சுகாதார உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.
காரைதீவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் கள விஜயம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.