கல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில் மொத்தமாக 1லட்சத்து 61ஆயிரத்து 44 தடுப்பூசிகளைச் செலுத்தி இதுவரை 67.82%வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் அதிகூடியதாக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 86.46%தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 10837பேரில் இதுவரை 9370பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84.03% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 15174பேரில் இதுவரை 12752பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 81.08% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 13670பேரில் இதுவரை 11183பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை இறக்காமம் பிரிவில் 79.65% ,காரைதீவுப்பிரிவில் 77.79%, நிந்தவூர்பிரிவில் 72.76 %,பொத்துவில் பிரிவில் 67.46 %,கல்முனை தெற்குப்பிரிவில் 67.16%,அட்டாளைச்சேனைப்பிரிவி ல் 65.36 %,சாய்ந்தமருதுப்பிரிவில் 65.08% ,அக்கரைப்பற்று பிரிவில் 62.46%, சம்மாந்துறைப்பிரிவில் 57.06%,கல்முனை வடக்குப்பிரிவில் 50.48 % தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.