‘ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலை’ என்ற திட்டத்தின்கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவியரீதியில் அறநெறிப்பாடசாலைகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர்பிரதேசத்திலுள்ள அட்டப்பளம் விநாயகர் அறநெறிப்பாடசாலைக்கான கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அட்டப்பள்ளம் ஶ்ரீ சிங்காரபுரமாரியம்மன் ஆலய வளாகத்தில் ஆலய தலைவர் திரு த.கோபாலன் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட இந்துசமய கலாசார அலுவலர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு சுகாதார நடைமுறைவிதிகளுக்கமைவாக நடைபெற்றது.
இந்துசமயகலாசாரஅலுவல்கள் திணைக்களம் வழங்கிய 2லட்சருபா நிதியுடன் கிராமமக்கள் சேகரித்த இரண்டுலட்ச ருபா நிதியும் அங்கு அலயநிருவாகத்திடம் கையளிக்கப்பட்டது. அமரர் அகிலேசிள்ளை குடும்பத்தினர் 1லட்சருபா நிதியை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் சமுா்த்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் கலாசார உத்தியோகத்தர்கள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.