ஊரடங்குநேரத்தில் அடங்காமல் வீதிகளில் உலாவித் திரிந்தவர்களுக்கு அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் நால்வர் தொற்றுள்ளவர்களாக இனங்காணப்பட்டனர்.
இச்சம்பவம் காரைதீவில் நேற்று இடம்பெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நேற்று மேற்கொண்ட 89 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்களுக்கு கொவிட்-19 தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டது.
வீதியில் உலாவித்திரிந்தோர் ,முகக் கவசம் சரியான முறையில் அணியாதவர், 60க்கு மேற்பட்ட வயதானவர்கள் என 89பேருக்கு மேற்கொண்ட இந்த பரிசோதனையில் நான்கு நபர்கள் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்கள்.
ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது.என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பொது சுகாதார பரிசோதகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நுளம்பு தடுப்பு பிரிவினர் இபாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு சூஅண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.