மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும்இல்லையெனவும் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார்.
பாவனையாளர் அலுவலகஅதிகாரசபையினால் பொருட்களைபதுக்கிவைத்துள்ள வர்த்தகர்களைகண்டறியும் வகையிலான விசேடநடவடிக்கைகள் இன்றுமுன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரனின் வழிகாட்டலில் மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஜி.அருணனின் தலைமையில் பாவனையாளர் அலுவலகஅதிகாரசபையினால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள், அரசி ஆலைகள் உட்பட பல்வேறு விற்பனை நிலையங்கள் இன்று சோதனை நடவடிக்கைகளுக்குஉட்படுத்தப்பட்டன. இதன்போது
அதிகளவான பொருட்களை பதுக்கிவைத்த விற்பனையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்தால் கடுமையான நடவடிகைகள் எடுக்கப்படும் எனவும்எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச
செயலகங்கள் தோறும் பாவனையாளர் அலுவலக அதிகாரசபைக்கான உத்தியோகத்தர்கள்நியமிக்கப்பட்டுள்ளதாகவும் யாராவது பொருட்களை பதுக்கிவைத்திருப்பதுதொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிந்தால் பிரதேச செயலகங்களில்நியமிக்கப்பட்டுள்ளஉத்தியோகத்தர்கள், பிரதேசசெயலாளர்களின் கவனத்திற்குகொண்டுசெல்லுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தினம் மட்டக்களப்பில் சதோச விற்பனை நிலையம் கள்ளியங்காட்டில் திறந்துவைக்கப்பட்டு அதன் ஊடாகமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவியாபாரிகளுக்கும் அத்தியாவசியபொருட்களை வழங்கும் நடவடிக்கைமுன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.