மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை மீறி அனாவசியமாக வீதிகளில் நடமாடுவேர்கள் அதிகரித்து கானப்படுவதனால் இரானுவத்தினர் மற்றும் பொலிசார் சுகாதார தரப்பினருடன் இணைந்து கடந்த சில நாட்களாக கண்கானிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்ற போதிலும். மக்களின் நடமாட்டம் குறையவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
பொது இடங்களில் அதிகளவான மக்கள் நடமாடுவது தொடர்ச்சியாக உள்ளமையும் பொருட்களை தொடர்ச்சியா கொள்வனவில் ஈடுபட்டு வருவதும் மீன் சந்தைகளில் அதிகளவான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய நிலையில் மக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளமை கவலையளிப்பதாக சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
பொதுவாக வீட்டுக்கு ஒருவர் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக செல்லமுடியும் என்று அதிகளவானவர்கள் சுகாதார விதிகளை மீறி மக்கள் செயல்ப்படுவதும் வீதிகளில் நடமாடுவதும் அதிகரித்துக்கானப்படுகின்றனர்.
அரசினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை பின்பற்றி மக்கள் ஒவ்வரு பொருளுக்கும் ஒவ்வருமுறை செல்லாது அனைத்து பொருட்களையும் ஒரேதடவையில் வாங்குவதன் மூலமும் வெளிபயணங்களை தவித்துக்கொள்வதன்மூலம் இந்த கொடிய கொரோனாவில் இருந்து விடுபடமுடியும்.