கொரோனா தொற்று உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் மனநல விசேட வைத்தியர் சஜிவன அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று உறுதியானதன் பின்னர் சிலருக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பல உளவியல் சார்ந்த நோய்கள் ஏற்பட நேரிடும்.
குறிப்பாக, சந்தோசமின்மை, அதிகரித்த கோபம், உணவின் மீதான நாட்டமின்மை, நித்திரையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
இந்த அறிகுறிகளானது, நாளடைவில் மன அழுத்தமாக மாறக்கூடும்.
அவ்வாறானவர்கள் 247 என்ற அவசர இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.