பேரில்லாவெளி கிராமத்தில் காவியா பெண்கள் நிறுவனத்தினால் சுயதொழில் கூட்டுறவு சங்கம் ஒன்றுக்கு ஆட்டுப் பண்ணை ஒன்று கையளிக்கப்பட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் ஐரேப்பிய யூனியனின் உதவியுடன்,  வீ எபக்ட் நிறுவனமும் காவியா பொண்கள் சுயதொழில் நிறுவனமும் இணைந்து கிரான்பிரதேசத்திலுள்ள பேரில்லாவெளி கிராமத்தில் அன்னம் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு அச்சங்கத்திற்கு 32 ஆடுகள் கொண்ட பாதுகாப்பான ஆட்டுப்பண்ணை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் குறித்த சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு  வழங்கிவைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்ணியமூர்த்தி சசிகலா, காவியா பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் காவியா நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 
 
இந் திகழ்வின்போது காவியா நிறுவனமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகடும் இணைந்து வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டது.
 
 வீ எபெக்ட் நிறுவனமும் காவியா பொண்கள் சுயதொழில் நிறுவனமும் இணைந்து கிராமங்களில் சங்கங்கள், குழக்கள் அமைத்து கடந்த ஆறு (06) வருடங்களுக்கு மேலாக 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் கிரான், வாகரை , வவுணதீவு,  களுவங்கேணி, மண்முனை வடக்கு  உள்ளிட்ட பல பகுதிகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts