கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி!!

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாக நடாத்தப்பட்ட
அரச திணைக்களங்களுக்கிடையிலான
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ண  கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
 
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான  கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியின் முதல்
சுற்று போட்டிகள் கடந்த வருடம் நிறைவுபெற்றிருந்த நிலையில் கொவிட் 19 தொற்று காரணமாக சுற்று போட்டியானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
 
இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி   போட்டிகள் கடந்த  30.11.2021 திகதி முதல் ஆரம்பமாகிய நிலையில் வாழைச்சேனை வீ.சி மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்றிருந்தது.
 
இந்நிலையில் கடந்த 03.12.2021 ஆந் திகதி  வாழைச்சேனை பஸ் டிப்போ அணியினரிற்கும் மாவட்ட செயலக அணியினரிற்கும் இடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றின் போது  மாவட்ட செயலக அணியினர் 26 ஓட்டங்களினால் வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துள்ளனர்.
 
அரச திணைக்களங்களுக்கிடையிலான 10 ஓவர்களை கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மாவட்ட செயலக அணி, 14 பிரதேச செயலக அணியினர் மற்றும் வாழைச்சேனை பஸ் டிப்போ அணியினர் அடங்கலாக  16 அணிகள் இச் சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றியுள்ளதுடன், குறித்த சுற்றுப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக மாவட்ட செயலக அணியைச் சேர்ந்த எம்.எம்.எம்.பாஹு மும், சிறந்த பந்து வீச்சாளராக மாவட்ட செயலக அணியைச் சேர்ந்த வை.ஜெயராஜ் மற்றும் தொடராட்ட நாயகனாக மாவட்ட செயலக அணியைச் சேர்ந்த துரைசிங்கம் ராஜ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் வெற்றிபெற்ற அணியினரிற்கும் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களையும் பரிசில்களையும் கோறளைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிரிந்தன்   வழங்கிவைத்துள்ளார்.
 
 

Related posts