(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களை வலுவூட்டும் முகமாக முழுநாள் செயலமர்வு ஒழுங்கு செய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இதுவரை 1423 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதிலும் 351 பேர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் போதைப் பொருள் அற்ற நாடாக சௌபாக்கியமான தேசத்தினை அனைத்து அரசியல் சாராத அரசாங்க உத்தியோகத்தர்களின் முயற்ச்சி எடுத்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சில் தங்களை அற்பணிக்கவேண்டும் எனவும் முல்லைத்தீவு கிளிநேச்சி மாவட்டங்களில் மதுபான சாலைகள் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டளவில் குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மாவட்டத்தின் குறிப்பிட்டுக்கூறக் கூடியவகையில் சிலபகுதிகளில் அதிகளவான போதைப் பொருள் வியபாரம் நடைபெற்று வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துக்கான புதிய பொறிமுறையினை கையான்டு வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.வண்டார குறிப்பிட்டார்.
வெல்லாவெளி வாகரை களுவாஞ்சிக்குடி செங்கலடி பட்டிப்பளை கிரான் போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவான சட்டவிரோத மது தயாரிக்கப்படுவதாகவும் ஏறாவூர் வாழைச்சேனை காத்தாங்குடி போன்ற பகுதிகளில் ஐஸ் கஞ்சா அவின் போன்றவைகள் அதிகளவில் வியாபாரசெய்யப்படும் இடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவு