மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (03) காலை 8.30 மணி முதல் 11.30 வரையான காலப்பகுதியில் 86 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. இம்மழைவீழ்ச்சியானது கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் பெய்த மழைவீழ்ச்சயிலும் பார்க்க அதிகமாக மழைவீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி வாகனேரி பிரதேசத்தில் அதிகபட்சமாக 91.9 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்தின் மழைவீழ்ச்சி அளவிடும் பகுதிகளான கிரான் பிரதேசத்தில் 88.2 மில்லிமீட்டரும், பாசிக்குடா பிரதேசத்தில் 84.4 மில்லிமீட்டரும், மயிலம்பாவெளியில் 70.0 மில்லிமீட்டரும், நாவகிரியில் 66.5 மில்லிமீட்டரும், மட்டக்களப்பில் 54.8 மில்லிமீட்டரும், கட்டுமுறிவில் 33.00 மில்லிமீட்டரும், தும்பங்கேணியில் 27.2 மில்லிமீட்டரும், உன்னிச்சையில் 25.0 மில்லிமீட்டரும், உறுகாமத்தில் 23.7 மில்லிமீட்டரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளன.
இதுதவிர இம்மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்காக மொத்த மழை வீழ்ச்சியாக 2254.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.