கிழக்கில் 5000 தென்னங்கண்றுகள் நடுகைசெய்யும் விசேட வேலைத்திட்டம்

கிழக்கில் 5000 தென்னங் கண்றுகளை நடுகை செய்யும் விசேட வேலைத்திட்டத்தினை பலநோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. 
 
 
ஜனாதிபதி கோட்பாய ராஜபக்சவின் எண்ணக்கருவிலான சுபீட்சத்தின் நேக்கு விசேட வேலைத்திட்டத்தின்கீழ் ஒருஇலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட இளைஞர் யுவதிகளைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
 
 
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 தென்னங் கண்றுகளை நடுகை செய்யும் வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் 2022 புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் முதல்நாளில் மாவட்ட செயலக புதிய கட்டிட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
பலநோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேஜர் கே.பீ. கமகேவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் சிவதர்சினி திருபாகரன் மற்றும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட இளைஞர் யுவதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர். இதன்போது மாவட்ட செயலக வளாகத்தில் தென்னங்கண்றுகள் பல நடப்பட்டன.
 
இதுதவிர இத்திட்டத்தினை சகல பிரதேச செயலகங்கள் வாயிலாகவும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட இளைஞர் யுவதிகள் தலா இரு தென்னங்கண்றுகளை நட்டு பராமரித்து பயன்பெறவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts