சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன்,செயலாளர் அம்பலவாணர் ராஜன் மற்றும் உறுப்பினர்களது ஆலோசனைக்கு அமைவாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தினைச் சேர்ந்த 56 மாணவர்களுக்குச் பாதணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 26 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இப்பாடசாலையின் அதிபர் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையினரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்கள் கலந்துசிறப்பித்ததுடன் மற்றும் மண்முனைப்பற்றுக் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.தில்லைநாதன் பாடசாலையின் அதிபர் ரவிச்சந்திரன் சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் திருமதி றொமிலாசெங்கமலன் உறுப்பினர் யுதர்சன் ஆகிர் கலந்து சிறப்பித்தனர்.