(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று (12) திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகும்.
இரண்டாம் நாள் நாளை (13) அம்பாளின் விசேட ஆராதனையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (14) திகதி வீதி ஊர்வலமும் மற்றும் ஊர்காவல் பண்ணலும் இடம்பெறும்.
நான்காம் நாள் செவ்வாயக்கிழமை (15) பலி திட்டமிடலும் மறுநாள் புதன்கிழமை (16) கன்னிமார் சடங்கும் நடைபெறும்.
ஆறாம் நாள் வியாழக்கிழமை (17) நெல் குற்றுதலும் மற்றும் சக்தி மகா பூஜையும் இடம்பெறும்.
இறுதிநாள் வெள்ளிக்கிழமை (18) காலையில் விநாயகர்ப் பானை எழுந்தருளப் பண்ணுதலும், மாலை தேவாதிகள் மற்றும் அடியார்கள் சகிதம் மஞ்சள் பூசி சமுத்திர நீராடலைத் தொடர்ந்து தீமித்தலும் இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை (20) வைரவர் பூஜையுடன் வருடாந்த சடங்கு கிரியைகள் யாவும் நிறைவுறும்.
வருடாந்த சடங்குக் கிரியைகளை பிரதம பூசகர் கு.சிவகுமார் தலைமையில் உதவிப் பூசகர்களான சீ.சுவேந்திரன், செ.கருணாகரன் மற்றும் க.லக்ஷமன் ஆகியோர் நடாத்துவர்.