வீணாகானத்துடன் நடைபெற்ற கிழக்கு வாணிவிழா!

ந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நவராத்திரிவிழாவின் ஆறாம்நாள்விழா நேற்றுமுன்தினம்(12)செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.
 
இந்துசமய கலாசாரத் திணைக்களம் காரைதீவு பிரதேசசெயலகம் மற்றும் காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து வரலாற்றில் முதற்தடவையாக இத்தகைய நவராத்திரிவிழாவை ஒழுங்குசெய்திருந்தது.
 
இந்துசமய கலாசாரத்திணைக்கள பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இவ்விழா சுகாதாரநடைமுறைவிதிக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
 
வாணிவிழாவின் முதல்நாள்  விழா நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. விசேடஅதிதியாகசுவாமி விபுலாநந்த பணிமன்றமுன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்துசிறப்பித்தார்.இவ்விழாவில் அறநெறி மாணவரின் பேச்சு நடனமும் இடம்பெற்றது. விசேடபூஜை பஜனை வழிபாடும் ஒருமணிநேரம் இடம்பெற்றது.
கிழக்குபல்கலைக்கழக சுவாமிவிபுலாநந்தர் நுண்கலைப்பீட மாணவியரின் வீணாகானம் நடைபெற்றது. மூன்று வீணைகளுடன் மாணவியர் அமர்ந்திருந்து கானமிசைத்தது நடைபெற்றமை சபையோரை ஈர்த்தது.
 
இந்துசமயகலாசார உத்தியோகத்தர் பி.பிரதாப் நிகழ்ச்சிகளை தொகுத்து நெறிப்படுத்தினார்.
 
இவ்விழா ஒன்பது நாட்களும் பல்வேறு கலைநிகழ்வு சொற்பொழிவுடன் இடம்பெற்று நாளை(15)வெள்ளி விஜயதசமியன்று ஏடுதொடக்கல் வித்தியாரம்பத்துடன் நிறைவடையவிருக்கிறது என பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.

Related posts